shadow

வெட்கம், சூடு, சொரணை இல்லை: டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சனம் செய்த ஸ்டாலின்

இன்று அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரபூர்வமாக இணைந்தது. திமுக, அதிமுக என இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணி என்பது முடிவாகிவிட்டது.

இந்த நிலையில் பாமக தங்கள் கூட்டணி இணையாததால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சனம் செய்துள்ளர். அவர் கூறியதாவது: 2009 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது பாமக. அதிமுக ஆட்சியை விமர்சித்து அதிமுகவின் கதை என்று புத்தகம் போட்டவர் டாக்டர் ராமதாஸ்.

பணத்தைப் பற்றி மட்டுமே டாக்டர் ராமதாஸுக்கு கவலை. அதிமுக பாமக கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி. 2009 தேர்தல் நிலைதான் 2019 தேர்தலிலும் பாமகவுக்கு ஏற்படும். டாக்டர் ராமதாஸுக்கு வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை.. இவ்வாறு முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply