shadow

வீட்டை அலங்கரிக்கப் புதிய வழிகள்

houseவீட்டை ஒரு குறிப்பிட்ட முறையில் வடிவமைப்பதை இப்போது பலரும் விரும்புகின்றனர். வீட்டின் ஒட்டுமொத்த அலங்காரத்துக்குப் பொருந்தும்படி இந்தப் புதிய முறையில் வீட்டின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்:
‘வாட்டர் கலர்’ சுவர்கள்
வீட்டின் சுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ‘வாட்டர் கலர்’ முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், அது பூக்களாலான வடிவமைப்பாக இருக்க வேண்டுமா அல்லது ஜியோமெட்ரிக் வடிவமைப்பாக இருக்க வேண்டுமா என்பதை உங்களுடைய ரசனைக்கேற்றபடி முடிவுசெய்துகொள்ளலாம்.
மென்மையின் அழகு
பூக்களை விரும்புபவர்கள் மென் நிற (Soft-hue) ‘ஃப்ளோரல்’முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதில் வழக்கமான வடிவமைப்புகளைவிட முற்றிலும் வித்தியாசமான ‘ஃப்ளோரல்’ முறையைத் தேர்ந்தெடுப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த முறையை ஜன்னல் திரைச்சீலைகள், தரை விரிப்புகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
வடிவங்கள் பேசும்
எல்லாமே சமச்சீராக விளங்க வேண்டும் என்று விரும்புபவராக இருந்தால், உங்களுக்கு ஏற்றது ‘ஜியோமெட்ரிகல் முறை’தான். இந்த ‘ஜியோமெட்ரிக்’ முறையை ‘உலோக’ வண்ணங்களில் பயன்படுத்துவது இப்போதைய டிரண்ட்.
இயற்கையின் எழில்
எப்போதும் உற்சாகத்தை விரும்புவர்களுக்கு ‘டிராபிகல் (Tropical) முறை’ சரியான தேர்வாக இருக்கும். இந்த ‘டிராபிகல் முறை’ வீட்டையே வண்ணமயமாக மாற்றிவிடும்.

ஆனால், இந்த முறையைக் கூடுமானவரை 
பெரிய இடத்தில் பயன்படுத்துவது நல்லது.
இணைப்பது நல்லது!
உங்களுக்கு ‘ஃப்ளோரல்’, ‘ஜியோமெட்ரிக்’, ‘இகட்’ எனப் பல வகையான முறைகளும் பிடித்திருந்தால், ஏதாவது ஓர் அடர்த்தியான வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள். அதில் இந்த எல்லா முறைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


புதுமையும் தேவை
கோடுகள், பூக்கள், போல்கா புள்ளிகள் என வழக்கமான முறைகளுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பாதவர்கள், கலை ரசனை மிளிரும் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுக்குப் பிடித்த ஓவியரின் ஓவியங்களிலிருந்தே ஒரு முறையை நீங்களே உருவாக்கலாம். அந்த முறையைப் பின்னணியாக வைத்து வீட்டின் அலங்காரத்தை வடிவமைக்கலாம்.

Leave a Reply