shadow

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: கூகுள் பிளஸ்

உங்கள் ஆன்லைன் அலுவலகத் தில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் என்ற நெட்வொர்க்கின் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உலகளாவிய முறையில் தொடர்பு களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதில் நாம் இணைத்திருப்பவர்களை உறவினர்கள், நண்பர்கள், பிசினஸ் தொடர்புகள், வாசகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். நீங்கள் பகிர நினைக்கும் தகவல்களை அனை வருக்கும் பொதுவாக்க வேண்டியதில்லை. விருப்பமான பிரிவுக்குத் தேவையான செய்திகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

Hangout மூலம் ஆன்லைனில் 10 நபர்களுடன் வீடியோ சாட் செய்ய முடியும். ஆன்லைன் பிசினஸ் மீட்டிங்குகளைச் செய்ய இது பேருதவியாகஇருக்கும். புகைப்படங்கள், வீடியோக்களை நேரடியாகப் பதிவுசெய்து வெளியிட முடியும். ஷேர் செய்ய முடியும்.

கூகுள் பிளஸ் மூலம் வெப் பக்கங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

இப்படி பிளாக், யூடியூப், ஸ்கைப், ஃபேஸ்புக் போன்ற அனைத்துச் சமூகவலைதளங்களின் பயன்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு ஆன்லைனில் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்துவரும் கூகுள் பிளஸ் வெப்சைட்டைத் தவிர்த்துவிட்டு நம்மால் இணைய உலகில் உலாவருவது கடினம், இதன்மூலம் நம் பிசினஸ் நெட்வொர்க்குகளைச் சிறந்த முறையில் பராமரிக்க இயலும். நம்மைப் பற்றிய செய்திகளையும் பிசினஸ் தகவல்களையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள முடிவதால் மிகச் சிறந்த விளம்பரமாக இது அமைகிறது.

www.plus.google.com என்ற முகவரி மூலம் கூகுள்+ வெப்சைட்டில் யூசர்நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொண்டு உறுப்பினராகலாம்.

கூகுள் பிளஸ் வெப்சைட் பயன்படுத்தும் முறை

1. நம் பிசினஸில் இமெயில் முகவரிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது கூகுள் பிளஸ். இமெயில் முகவரி ஜிமெயிலாக இருந்தால் கூகுள் பிளஸ் அக்கவுன்ட் டுக்கும் அதே யூஸர் நேம், பாஸ்வேர்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹாட்மெயில், யாஹு என வேறு வெப்சைட் முகவரியாக இருந்தால் கூகுள் பிளஸ் வெப்சைட்டுக்குப் புதிதாக யூஸர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

2. கூகுள்+ வெப்சைட்டில் இமெயில் தொடர்புகள் மூலம் நண்பர்கள் (Friends), குடும்ப உறுப்பினர்கள் (Family), ஓரளவுக்கு அறிமுகமானவர்கள் (Acquaintances), பின் தொடரும் பிரபலங்கள் (Following) என நான்கு பிரிவுகளாகப் பிரித்துச் சேகரித்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதற்கு Circle என்று பெயர். நம் தேவைக்கேற்ப கிளைன்ட்டுகளின் பிரிவுவாரியாக எத்தனை சர்கிள் வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ள முடியும். இதன் மூலம் கூகுள்+ வெப்சைட்டில் நாம் பகிர நினைக்கும் தகவல்களை அந்தந்த சர்கிள்களில் உள்ளவர்களுக்கு மட்டும் ஷேர் செய்துகொள்ளலாம். எல்லா பிசினஸ் தகவல்களையும் எல்லா நட்புகளுக்கும் பகிர வேண்டிய அவசியம் இல்லை.

3. நம் இமெயில் ஜிமெயிலாக இருந்தால், நாம் உருவாக்கியுள்ள சர்கிள்களின் பெயர்கள் இமெயில் திரையில் இணைக்கப்பட்டு வெளிவரும். இமெயில் அனுப்பும்போதுகூட இந்த சர்கிள்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

4. நம் நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி கள், தயாரிப்புகள் போன்றவற்றின் புகைப்பட ஆல்பங்களைச் சேகரித்து வைக்க முடியும். தேவைப்படும்போது அவற்றை யாருடன் ஷேர் செய்ய விருப்பமோ அவர்களுக்கு ஷேர் செய்துகொள்ளலாம். விளம்பரப்படுத்திக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.

5. நம் நிறுவனத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை இடம், நாள், நேரம் உள்பட அனைத்து விவரங்களையும் Event என்ற விவரம் மூலம் கிளையன்ட்டுகளுக்குத் தெரிவிக்க முடியும்.

6. நம் நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்வு களை நேரடியாக ரெகார்ட் செய்து கூகுள் பிளஸ் வெப்சைட்டில் யூடியூப் பதிவு களாக வெளியிட முடியும். அவற்றை நம் கிளைன்ட்டுகளுடன் ஷேர் செய்ய முடியும். இதன் மூலம் நம் தயாரிப்புகளுக்கு, சர்வீஸ்களுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.

7. மேலும் நம் கிளையன்ட்டுகளுடன் வீடியோ சாட் செய்யவும் கூகுள் பிளட் வெப் சைட்டில் வசதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 10 நபர்களுடன்கூட வீடியோ சாட் செய்ய முடியும். இதனால் நம் பிசினஸ் மீட்டிங்குகளை ஆன் லைனிலேயே சுலபமாக முடிக்க முடியும். தொலைவு என்பது பிசினஸுக்குப் பிரச்சினை இல்லை.

8. நம் பிசின்ஸுக்காக வெப் பக்கங்களை வடிவமைத்துத் தயார் செய்துகொள்ள உதவும் Pages என்ற வசதியையும் கூகுள் பிளஸ் கொடுத்துள்ளது. எத்தனை வெப் பக்கங்களை வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளலாம். நம் தயாரிப்புகள், சர்வீஸ்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வெப் பக்கங்கள் வடிவமைத்து ஷேர் செய்து விளம்பரமாக்கிக்கொள்ளலாம்.

9. இவை தவிர ஃபேஸ்புக்கில் போஸ்ட்டிங் செய்வதைப் போலவே, கூகுள் பிளஸ் வெப்சைட்டிலும் நம் பிசினஸ் குறித்த தகவல்களைப் புகைப்படம், வீடியோ, இன்டர்நெட் லிங்க் போன்றவற்றுடன் இணைத்து போஸ்ட்டிங் செய்ய முடியும். இவற்றை நம் கிளைன்ட்டுகளுடன் ஷேர் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் அன்றாட நிகழ்வுகளை நம் பிசினஸ் தொடர்பில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

10. நம் பிசினஸுக்கு உதவக்கூடிய கம்யூனிட்டிகள், புத்தகங்கள், வெப்சைட்டுகள் போன்றவற்றை சப்ஸ்க்ரைப் செய்து வைத்துக்கொள்ளும் Collections & Communities என்ற வசதியும் உள்ளன. இதன் மூலம் அந்த வெப்சைட்டுகள் அன்றாடம் அப்டேட் செய்கிற செய்திகள் நம் கூகுள் பிளஸ் வெப்சைட்டில் வெளிவரும். அவை மறைமுகமாக நம் பிசினஸுக்கு ஆலோசனைகளைக் கொடுக்கும். தொடர்புகளை உண்டாக்கும்.

Leave a Reply