shadow

‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை

vetti kattuஅஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘அடிச்சுத் தூக்கு’ என்ற முதல் பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். குத்து பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் வெளியான 1 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அப்போது அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வெளியாகியுள்ள ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியான 50 நிமிடங்களில் 2 லட்சம் லைக்குகளை பெற்றிருப்பதாகவும், ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாகவும் லஹரி மியூசிக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த பாடல் தற்போது வரை 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பாது குறிப்பிடத்தக்கது

Leave a Reply