shadow

விஸ்வாசம்’ படத்திலும் என் பெயர் உள்ளது. நஸ்ரியா

தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘தல 59’ படத்தில் ஸ்வேதா என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளதாக நடிகை நஸ்ரியா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலரில், ‘என் பேர் தூக்குதுரை ஊர் தேனி மாவட்டம், பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா’ என்ற வசனம் உள்ளது. எனவே ‘தல 59’ படத்தில் தான் நடிக்கவுள்ள ‘ஸ்வேதா’ என்ற கேரக்டர் விஸ்வாசம் படத்திலும் இருப்பதாக நடிகை நஸ்ரியா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

Leave a Reply