விஸ்வாசம் அஜித்துக்கு ஒரு வருடம் கழித்து பதிலடி கொடுத்த தர்பார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம், தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த பழைய இரண்டு படங்களிலும் இடம்பெற்ற இரண்டு வசனங்கள் பெரும் பரபரப்பை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அந்த பரபரப்பான வசனங்கள் இவைதான்:

* ‘‘சத்தியமா சொல்ரேன், அடிச்சு அண்டர்வேரோட ஓடவிட்ருவேன்’

* ’பேரு தூக்கு துரை தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார் பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பெரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா ”

அஜித்தின் விசுவாசம் வசனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் ‘உன் பேரு அட்ரஸ் எல்லாம் தெரிஞ்சு நான் என்ன கேபிள் கனெக்சனா கொடுக்க போறேன்’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது

இதனை அடுத்து விரைவில் வெளிவர உள்ள அஜித்தின் வலிமை படத்தில் இதற்கு பதிலடி கொடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply