shadow

விஷ்ணுவிஷால் வெற்றிக்கு கைகொடுத்த உதயநிதி

silukkuvarpatti singamவிஷ்ணுவிஷால், ஓவியா, ரெஜினா நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கிய ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தீவிரமாக நடந்து வருகிறது. .

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் கைப்பற்றியுள்ளதால் இனிவரும் நாளில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுவிஷால் நடித்த ‘நீர்ப்பறவை’ படத்தையும் உதயநிதிதான் ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷ்ணுவிஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

 

Leave a Reply