shadow

விஷால் ரசிகர்களுக்கு நாளை கொண்டாட்டம்

கடந்த ஆண்டு விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ மற்றும் ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கட்மோகன் இயக்கி வரும் ‘அயோக்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஷால் ரசிகர்களுக்கு நாளை கொண்டாட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘டெம்பர்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வருகிறார். சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply