shadow

விஷாலுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவிப்பது கட்சிக்கு செய்யும் துரோகம்; கராத்தே தியாகராஜன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்திருப்பது கட்சிக்கு செய்யும் துரோகம் என்று குஷ்பு மீது கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஷாலுக்கு சமீபத்தில் குஷ்பு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்துதான் தற்போது சர்ச்சைக்குரியதாகி உள்ளது.

கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுபவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள குஷ்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply