shadow

விஷாலின் வருங்கால மனைவி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் விஷால் .மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் உள்ளார்.

இந்த நிலையில் அனிஷா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தற்போது விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்ரி விஷால் -அனிஷா திருமணம் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த திருமணம் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கம் கட்டிடத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் இந்த கட்டிடத்தில் நடைபெறும் முதல் திருமணம் இதுதான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

 

Leave a Reply