shadow

விஷாலின் தோல்வி வருத்தமளிக்கின்றது. இயக்குனர் சேரன்

சென்னை ஆர்.கே.நகரில் விஷலை போட்டியிட விடாமல் ஆளுங்கட்சியினர் சதி செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் விஷால் தேர்தலில் நிற்க எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் சேரன், தொழில்ரீதியாகப் போட்டி இருந்தாலும் விஷாலின் இந்ததோல்வி வருத்தமளிப்பதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நண்பர் விஷாலின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அனுபவமின்மையே காரணம். தொழில்ரீதியாகப் போட்டி இருந்தாலும், அவரின் தோல்வி வருத்தமளிக்கிறது. விளம்பரத்திற்காக ஆசைப்படுபவர்கள் யாரென மக்களுக்குத் தெரியும். விஷால் அனுப்பிய எல்லாக் கடிதங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அடுத்தத் தயாரிப்பாளர் சங்கப் பொதுத்தேர்தலின்போது எங்கள் பிரச்சனைகளை முன்வைப்போம்” என்று கூறினார்.

மேலும் அமைதியான முறையில் தாங்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் சேரன் நன்றி தெரிவித்து கொண்டார். சேரனை போலவே இயக்குனர் அமீரும் விஷாலின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply