shadow

விஷாலின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

விஷால் நடித்துவரும் ‘அயோக்யா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் தயாரிப்பாளர் சங்க நலனுக்காக தயாரிக்கப்படவுள்ளது

இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் கிடைத்த லாபத்தை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவி செய்யவுள்ள நிலையில் விஷாலின் அடுத்த படத்தில் கிடைக்கும் லாபம் முழுவதும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு செல்லவுள்ளது

விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தை இயக்குனர் கவுதம்மேனன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகள் சம்பளம் பெறாமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

 

Leave a Reply