shadow

விஷமாகும் உணவுகள் லேபிள் படித்துத் தெளிவோம்!

எந்தப் பொருளை வாங்கினாலும் லேபிளைச் சரி பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே, பாதி நோய்களை வராமல் தவிர்க்க முடியும். அந்த லேபிளில் புரியாத, கேள்விப்படாத வார்த்தைகள் இருந்தால் அவற்றைத் தவிர்ப்பது உடலுக்கும் உயிருக்கும் நல்லது.

பதப்படுத்திகள் ஏன் சேர்க்கப்படுகின்றன?

உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் இருக்கவும் சுவையை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. உணவு கெட்டுப்போகவில்லை எனில், அது உணவே கிடையாது. அப்படிக் கெட்டுப்போகாத உணவு நமக்கான உணவாக இருக்க முடியாது.

இதைப் புரிந்துகொண்டாலே போதும். பேக் செய்யப்படும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க மாட்டோம்.

எந்தெந்தப் பொருள்கள்?

சமையல் எண்ணெயில், ப்ரொபைல் கேலேட் (Propyl Gallate) சேர்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிறு மற்றும் சரும பிரச்னைகள் வரலாம்.

ஐஸ்கிரீம்களின் வழவழப்பு தன்மைக்குப் பாலிசார்பேட்ஸ் (Polysorbates 60,65 & 80) எனும் பதப்படுத்திகள்தான் முக்கியக் காரணம். எந்தப் பொருள்களை எல்லாம் கிரீமியாக மாற்ற வேண்டுமோ அவற்றில் எல்லாம் இந்தக் கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் மூளை பாதிப்பு, கர்ப்பப்பை பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

மீன், சிக்கன், சாக்லேட் போன்ற உணவுகளில் டி.ஹெச்.பி.ச்.கியு (TBHQ – tert-Butylhydroquinone) பதப்படுத்தியாகப் பயன்படுகிறது. இது, நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதீத இயக்கம் (Hyperactivity) பிரச்னையைத் தூண்டும்.

சீஸ், மார்ஜரைன் போன்ற உணவுப் பண்டங்களில், பொட்டாசியம் சார்பேட் (Potassium Sorbate) கலந்திருக்கும். இதனால், அரிப்பு, எரிச்சல், கண்களில் அதிகமாக நீர் வழிதல், வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

இறைச்சி பிரெஷ்ஷாகத் தெரியவேண்டும் என்பதற்காகக் கலக்கப்படும் நைட்ரேட்ஸ் (Nitrates) கெமிக்கல், கடைகளில் பேக் செய்யப்பட்டு விற்கும் காய்கறிகளிலும் தெளிக்கப்படுகிறது. இது இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Leave a Reply