shadow

விஷக்கிருமிகள் பரவுவதால் கியூபா தூதரகத்தை மூடுகிறது அமெரிக்கா

அமெரிக்காவுக்கும் அண்டை நாடான கியூபாவுக்கும் பல ஆண்டுகள் கருத்துவேறுபாடு இருந்தாலும் ஒபாமா, அந்த வேறுபாடுகளை நட்பு நாடுகளின் பட்டியலில் கியூபாவை சேர்த்தார். அதன்பின்னர் கியூபாவில் அமெரிக்க தூதரகங்அக்ளும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு திடீர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்கு விஷக்கிருமிகள் பரப்பப்படுவது தான் காரணம் என தெரிய வந்துள்ளதால் கியூபா தூதரகத்தை மூடிவிட்டு நாடு திரும்புமாறு அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மறுத்துள்ளார். இத்தகைய நோய் தாக்குதலில் கியூபா ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply