shadow

விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்!

விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் இன்று நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62

நேற்று பாமக அளித்த விருந்தில் கலந்து கொண்ட அதிமுக எம்பி ராஜேந்திரன் பின்னர் காரில் விழுப்புரம் திரும்பி கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே அவர் சென்ற கார் திடீரென சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் சுமார் 2 லட்சம் ஓட்டு அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply