shadow

விலங்குகளுடன் பேசும் விஜய். இதுவரை வெளிவராத ‘புலி’ ரகசியம்
Puli-Movie-Unseen-Photos-8
அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள விஜய்யின் ‘புலி’ படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. ‘புலி’ படத்தின் இரண்டாவது டிரைலரில் விஜய் ராட்சத ஆமை ஒன்றுடன் பேசுவது போன்று ஒரு காட்சி வரும். இந்த காட்சியை போல பல காட்சிகளில் விஜய் விலங்குகளுடன் பேசுவது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது விஜய்யின் கண்கள் திடீர் திடீர் என நீல நிறத்தில் மாறும் என்றும் அவ்வாறு நீல நிறத்தில் மாறும்போதெல்லாம் அவருக்கு விலங்குகளுடன் பேசும் திறன் வரும் என்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் ‘புலி’ படத்தில் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றுதான் தற்போது வெளிவந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் பல ரகசியங்களை ரிலீஸுக்கு முந்தைய நாள் விஜய் டுவிட்டரில் உரையாடும்போது சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்