shadow

விரைவில் வெளியாகும் விவோ X20 பிளஸ் UD

இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட விவோ நிறுவனத்தின் X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
விரைவில் வெளியாகும் விவோ X20 பிளஸ் UD
புதுடெல்லி:

இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை விவோ முதற்கட்டமாக சீனாவில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் 3698 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.36,659 விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை விவோ நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும் ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்தது.

இந்த ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் துவங்கிவிட்டதாகவும், விரைவில் வெளியிடப்படலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் முன்னதாகவே அறிமுகம் செய்யப்படலாம் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் விவோ X20 பிளஸ் UD என அழைக்கப்படலாம் என்றும் இதன் விற்பனை விரைவில் துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனில் AMOLED ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் கைரேகை ஸ்கேனர் கிளாஸ் பேனல் மற்றும் OLED பேனல்களுக்கு இடையே வைக்கப்பட்டுள்ளது. விரல் கிளாஸ் பேனலை தொடும் போது OLED பேனல் கைரேகை பகுதியை பிரகாசமாக்கி, உள்ளிருக்கும் சிப் வேலை செய்யும். விவோ X20 பிளஸ் UD சமீபத்தில் 3C சான்றிதழ் பெற்றிருக்கிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பார்க்க விவோ X20 பிளஸ் போன்று காட்சியளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் 0.6 முதல் 0.7 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்கிறது.

Leave a Reply