shadow

விஜய் 62′ படத்தில் யோகிபாபு

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ அடத்தை அடுத்து ‘விஜய் 62’ திரைப்படம் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள இந்த படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் என்பதும், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இணைந்துள்ளதாக லேட்டஸ்ட்  தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் யோகிபாபுவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கதையுடன் அவரது கேரக்டர் பயணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுருக்கமாக கூறினால் ‘துப்பாக்கி’ படத்தில் சத்யனும், கத்தி’ படத்தில் சதீஷும் நடித்தது போன்ற ஒரு கேரக்டரை யோகிபாபுவிற்காக ‘தளபதி 62’ படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது எனவே இந்த படத்திற்கு பின்னர் யோகிபாபுவின் மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply