shadow

விஜய், விஷாலுடன் மோதும் நயன்தாரா

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ வரும் தீபாவளி அன்று திரைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள் நிலையில் அதே தினத்தில் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்,’ விஷால் நடித்துள்ள ‘வில்லன்’ உள்பட ஒருசில படங்கள் திரைக்கு வெளிவருகின்றன.

இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘அறம்’ திரைப்படமும் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய், விஷால் படங்கள் வெளியாகும் அதே தினத்தில் நயன்தாரா படமும் வெளியாவது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள இந்த படத்தை மீஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave a Reply