விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் எப்போது திருந்துவார்கள்?

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போதிலும், நடுநிலை விமர்சகர்கள் அந்த படத்தை கிழிகிழி என கிழித்து வருகின்றனர். ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்றால் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு படத்தை எடுக்க முன் செய்ய வேண்டிய ஆய்வுகள் எதுவுமே செய்யாமல் இந்த படத்தில் மாஸ் காட்சிகளை எப்படி வைக்க வேண்டும், ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக் எப்படி வைக்க வேண்டும் ஹீரோவிற்கு மாஸ் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே இயக்குனர் அட்லி யோசித்து உள்ளதாக தெரிகிறது

ஒரு இயக்குனர் ஹீரோவை முன்னிறுத்தி மட்டுமே மாஸ் காட்சிகளை வைப்பதற்கு காரணம், இயக்குனர் மட்டுமே இருக்க முடியாது. அதில் ஹீரோவின் தலையீடுகளும் இருக்க வேண்டும் என்பதே உண்மை. ஒரு ஹீரோ என்பவர் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அவர் மட்டுமே வர வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் அழுத்தங்களும், இயக்குனர்கள் இவ்வாறு செயல்பட காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

ஒரு கால்பந்து போட்டி கதையம்சத்தை கொன படத்தை பல கோடி ரூபாய் செலவழித்து எடுத்தும், ஒரு காட்சி கூட மனதை கவரும் வகையில் இல்லாதது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்த பல விதமான யோசனைகள் செய்து மாஸ் காட்சிகள் வைத்த இயக்குனர், கால்பந்தாட்ட போட்டியை சுவராசியமாக படமாக்க ஒரு நிமிடம் கூட அவ யோசிக்கவில்லை என்பது மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கூறிய விஷயம்

இவ்வாறு ஹீரோவை மட்டுமே மாஸாக காட்ட வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் எதற்காக ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தை எடுக்க வேண்டும்? முழுக்க முழுக்க ஒரு மாஸ் படத்தை எடுத்து விட்டு போகலாமே? என்றும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

விஜய் போன்ற நடிகர்கள் ஒரு படத்தில் தங்களை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என்று நினைக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த படம் காட்டுகிறது. இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்க போது தன்னுடைய கேரக்டர் மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைக்க அவர் யோசனை சொல்ல வேண்டும்

மேலும் ஒரு படத்தில் வில்லன் வலிமையாக இருந்தால் மட்டுமே ஹீரோவிற்கு வேலை இருக்கும். வில்லனை பிகில் படத்தில் மிக மொக்கையாக காட்டி விட்டதால் ஹீரோவிற்கு வேலையே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் விஷாலின் ’இரும்புத்திரை’ அந்த படத்தில் அர்ஜுன் கேரக்டர் மிகப்பெரிய ஒரு வலிமை வாய்ந்ததாக இருந்ததால் ஹீரோ விஷால் கேரக்டருக்கு ஒரு கெத்து ஏற்பட்டது.

அந்த பார்முலாவை இனி அனைத்து நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை விமர்சகர்கள் கூறி இருந்தும் அது மாஸ் நடிகர்களின் காதிலும் சரி அந்த நடிகர்களை வைத்து இயக்கும் இயக்குனர்களின் காதிலும் விழவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்

ஹாலிவுட் படங்களில் வெறும் பிரம்மாண்ட மட்டும் இருக்காது, அந்த பிரம்மாண்டத்துடன் அதற்குரிய கதை திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் இங்கு பணம் இருக்கிறது என்பதற்காக வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே உருவாக்கி விட்டு அதில் அழுத்தமான கதையும் இல்லாமல் காட்சியமைப்புகள் இல்லாமல் இருந்தால் அந்த படம் நிச்சயம் மக்களின் ஆதரவை பெறாது என்பதை எப்பொழுது இந்த பிரம்மாண்ட இயக்குநர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை

மாஸ் நடிகரான விஜய் மட்டுமல்ல, ரஜினி, அஜித் போன்ற மாஸ் நடிகர்களும் தற்போது விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. இன்னமும் சுயபுராணம் பாடும் வகையில் படமெடுத்தால் மாஸ் காணாமல் போய்விடும் என்பதை அவர் உணர்ந்து கொள்வார் என நம்புவோம்

Leave a Reply