shadow

விஜய்-பிரபுதேவா பட நடிகர் மீது பாலியல் புகார்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான படம் ‘லட்சுமி’. நடனத்தை மையமாக கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இந்த படத்தில் நடனமாடும் குழந்தைகளின் பயிற்சியாளர் கேரக்டரில் சல்மான் யூசுப் கான் என்பவர் நடித்திருந்தார். இவர் மீது பாலியல் புகார் ஒன்று மும்பை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சல்மான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

‘வாண்டட்’, ‘ABCD’, ரத்த சரித்திரா, உள்பட பல பாலிவுட் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக சல்மான் யூசூப் கான் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply