shadow

விஜய்யின் 64வது படம் ‘துப்பாக்கி 2?

துப்பாக்கி , கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வெளியான உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் ‘துப்பாக்கி 2’ படம் கண்டிப்பாக வரும் என்று கூறினார். இதன்மூலம் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தற்போது அட்லீ இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு மீண்டும் விஜய் – முருகதாஸ் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply