shadow

விஜய்யின் ‘மெர்சல் படத்தின் டீசர் எப்போது?

விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

ஆம், இன்று மாலை ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகும் நாள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை என்றாலும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கசிந்துள்ள இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளத்தின் டிரெண்டாக உள்ளது

ஒருபக்கம் தல அஜித் ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தின் டீசர் செய்த உலக சாதனையை கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய் ரசிகரகள் ‘மெர்சல்’ டீசர் வந்தவுடன் ‘விவேகம்’ சாதனையை உடைக்க தயாராகி வருகின்றனர்.

Leave a Reply