விஜய்யின் பிகில்: அமெரிக்காவில் 41 மாகாணங்களில் 250 திரையரங்குகளில் ரிலீஸ்

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படம் அமெரிக்காவில் 41 மாகாணங்களில் 160 நகரங்களில் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு தமிழ் திரைப்படம் அமெரிக்காவில் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் வெளியாவது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது

ரிலீசுக்கு முன்னரே ரூ.200 கோடி வசூல் செய்துவிட்ட ‘பிகில்’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் நிச்சயம் மிகப்பெரிய லாபம் தரும் படமாக இந்த படம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply