shadow

விஜய்யின் நடனத்தை ஒரு பாடமாக வைக்கலாம்: பராக் கான்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், இலியானா நடித்த ‘நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒல்லி பெல்லி என்ற பாடல் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இந்த பாடலில் விஜய் சூப்பராக நடனம் ஆடியிருப்பார். இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் பாலிவுட் பிரபல நடன இயக்குனர் பராக் கான்

இவர் சமீபத்தில் விஜய் குறித்து கூறியபோது, ‘விஜய் ஒரு அருமையான மனிதர். படப்பிடிப்பு தினத்தில் காலையில் 7.30 படப்பிடிப்பிற்கு சரியாக வந்துவிடுவார். அவருடைய நடன ஸ்டெப்களை பார்த்து ஒரு பலமுறை பிரமித்துள்ளேன்

விஜய்யை உதாரணமாக வைத்து நிறைய பாலிவுட்டின் இளம் நடிகர்களுக்கு நடனம் பற்றி பாடம் எடுக்கலாம். அவருடன் இன்னும் வித்தியாசமான பாடலை நடன அமைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்

//www.youtube.com/watch?v=LGpVVjyDJCI

Leave a Reply