விஜய்சேதுபதியை சந்தித்த தமிழக கிரிக்கெட் வீரர்

இன்னும் ஒருசில நாட்களில் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி சென்னையில் சிஎஸ்கே அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளதால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விஜய் சங்கர் சமீபத்தில் தனது திறமையான பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று நடிகர் விஜய்சேதுபதியை விஜய்சங்கர் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். விஜய்சேதுபதியை ஒரு ரசிகர் என்ற முறையில் சந்தித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விஜய்சங்கர் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply