shadow

விஜய்சேதுபதியுடன் இணையும் ‘வேதாளம்’ நடிகை
lakshmi menon
விஜய்சேதுபதி தற்போது அரைடஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காதலும் கடந்து போகும்’, தர்மதுரை மற்றும் சேதுபதி ஆகிய மூன்று படங்களும் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்

அருண்விஜய் நடித்த ‘வா டீல்’ படத்தை இயக்கிய இயக்குனர் சிவஞானம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் ‘ரெக்கை’. இந்த படத்தில் நடிக்க விஜய்சேதுபதி மற்றும் லட்சுமிமேனன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்த காட்சிகள் இல்லை. அந்த குறையை போக்கும் வகையில் இந்த படத்தில் லட்சுமிமேனன், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ படம் போல் ஒரு ரேஸிங் படம் என்றும் அதனால்தான் பொருத்தமாக ‘ரெக்கை’ என்று டைட்டில் வைத்துள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply