விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் சிந்துபாத் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது அரைடஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக , ‘கனா’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ரம்மி, ‘பண்ணையாரும் பத்மினியும், ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘தர்மதுரை’ ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘க/பெ ரணசிங்கம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

விருமாண்டி என்பவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

Leave a Reply