shadow

விஜயகாந்த் மகன் செய்வது தவறான செயல்: தங்கத்தமிழ்ச்செல்வன்

விஜயகாந்தின் உடல் நிலையை விசாரிக்க வரும் தலைவர்கள் குறித்து அவரது மகன் விமர்சனம் செய்வது தவறான செயல் என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரிக்க திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருடைய இல்லத்திற்கு சென்று வந்தனர். இவர்களில் ஒருசிலரை விஜயகாந்த் மகன் பிரபாகரன் சர்ச்சைக்குரிய வகையில் விசாரித்ததாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் விஜயகாந்தின் உடல் நிலையை விசாரிக்க வரும் தலைவர்கள் குறித்து அவரது மகன் விமர்சனம் செய்வது தவறான செயல் என்று கூறினார்.

மேலும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் தேர்தலில் படுதோல்வி அடையும் என்றும், 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்றும், ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க.வை கேவலமாக விமர்சித்த பா.ம.க.வுடனான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்

 

Leave a Reply