shadow

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவேன். தமிழருவி மணியன்
tamilaruvi
காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை நடத்தி வரும் தமிழருவி மணியன், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மூன்றாவது அணி அமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியுடன் தனது இயக்கத்தை இணைத்த அவர், பின்னர் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகி  வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என்று கூறிய தமிழருவி மணியன் பின்னர் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டு  30 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் மற்ற தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம் என்றும் தற்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், “காந்திய மக்கள் இயக்கம் 30 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இப்போது 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 5 வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பேன். மற்ற தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம். ஆனால், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அது மக்கள் விரோத கூட்டணி என்று சொல்லி வெளியேறிவிடுவேன். அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் உட்பட மாணவர் அமைப்பினர் சிலரை எங்கள் இயக்கம் சார்பில் களமிறக்க பேசி வருகிறோம். விரைவில் அந்த முடிவை அறிவிப்போம்’’ என்று கூறினார்

Leave a Reply