shadow

விஜயகாந்தை சந்தித்து பேசியது என்ன? திருநாவுக்கரசர் பதில்

அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு இழுக்கும் வகையில் விஜயகாந்தை இன்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே திருநாவுக்கரசர் சென்றதாக கூறப்பட்டாலும் இது முழுக்க முழுக்க அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்திப்பு என்று கூறப்படுகிறது

இந்த சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் கூறியதாவது: விஜயகாந்தும் நானும் இருவருமே அரசியல்வாதிகள்தான்.. எனவே தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பேசியது உண்மைதான். அரசியல் பேசவில்லை என்று சொன்னால் அது பொய்யாகாதா? என்று கூறியுள்ளார்.

Leave a Reply