shadow

விசிறிகள் இல்லாத பேன்

fanவிசிறிகள் இல்லாமல் பேன் எப்படி இயங்கும்? அப்படியான ஒரு காற்று விசிறியை அறிமுகப்படுத்தியுள்ளது டைசன் என்கிற அமெரிக்க நிறுவனம்.

ஓவல் வடிவில் இருக்கும் இந்த இயந்திரத்தில் சாதாரண மின் விசிறிகளைப் போல இறக்கைகள் கிடையாது. குளிர்ந்த காற்று அல்லது வெப்பமான காற்று இரண்டையும் இந்த இயந்திரத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். பேன் இயங்கும் சத்தம் கூட கேட்காது.

காற்று வீசும்போது கைகளை குறுக்கே கொடுத்து விடுவோம் என்கிற பயம் இல்லை. தானியங்கி சென்சார்கள் உடனடியாக பேன் இயங்குவதை நிறுத்திக் கொள்ளும்.

மேலும் பிளேடுகள் இல்லையென்பதால் பயமும் இல்லை. சுத்தம் செய்வதும் எளிது. அறையின் வெப்ப நிலைக்கு ஏற்ப தானியங்கி ஆன் /ஆப் டைமர் உள்ளதால் நடு இரவில் எழுந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த இயந்திரத்தின் கீழ் பகுதி வழியாக உட்செல்லும் காற்று ஆப்ஷனுக்கு ஏற்ப குளிர்ந்த காற்றாகவோ, வெப்ப காற்றாகவோ மேற்புறம் மூலம் வெளிவருகிறது.

ஒரே திசையில் குவிந்து வீசுவது போலவோ அல்லது அறை முழுவதும் படர்ந்து வீசுவது போலவோ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் முடியும்.

Leave a Reply