விக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா?

விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவடைந்தது. நிலவின் தென் துருவத்தில் இன்று முதல் சூரிய ஒளி கிடைக்காது என்பதால் லேண்டரில் உள்ள சோலார் வேலை செய்யாது. எனவே விக்ரம்லேண்டர் இன்றுடன் முற்றிலும் செயல் இழக்கின்றது

இஸ்ரோவின் ஆர்பிட்டரும், நாசாவின் ஆர்பிட்டரும் பல முயற்சிகள் செய்தும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. குறைந்தபட்சம் விக்ரம் லேண்டர் எதனால் செயல் இழந்தது என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும், லேண்டருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றே ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படத்தில் இருந்து தெரிய வந்தது. இருப்பினும் விக்ரம் லேண்டர் செயல் இழந்தது மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் தான் காரணம் என்றும், விக்ரம் லேண்டரில் உள்ள ரோவர் அவர்களால் கைப்பற்றியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் ஒரு வதந்தி திடீரென பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை விஞ்ஞானிகள் தான் கண்டுபிடிக்க வேண்டும்

Leave a Reply