விக்ரம் படத்தில் மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்

விக்ரம் நடித்த ‘புதிய மன்னர்கள்’, ‘ராவணன்’ மற்றும் ‘ஐ’ ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மீண்டும் அவரது படம் ஒன்றுக்கு இசையமைக்க இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விக்ரம் நடிக்கும் 58வது படத்தை அஜய்ஞானமுத்து இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வைகாம் 18′ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. விக்ரம் ஜோடியாக இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகை நடிக்கவுள்ளார்.

Leave a Reply