விக்ரமின் அடுத்த பட டைட்டில் இதுதான்!
நவராத்திரி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்து இருந்ததைப் போல் தசாவதாரம் படத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விக்ரம் நடித்து வரும் ’விக்ரம் 58 ’ படத்தில் விக்ரம் 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் இந்த படத்திற்கு கோப்ரா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது
விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, கேஎஸ் ரவிக்குமார், கிரிக்கெட்வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ள இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.