விக்கிரவாண்டி, நாங்குநேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதியில் வெ. நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

முன்னதாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply