shadow

வாழ்வதற்கானது வீடு
rain_home1_2629254a
சென்னை போன்ற நகரங்களில் வீடு வாங்குவது என்பது மிகப் பெரிய விஷயம்தான். வீட்டைக் கட்டுவது போல வாங்குவது அவ்வளவு எளிய காரியமல்ல.

வீட்டின் தலைவர் மட்டும் பார்த்து வீட்டை வாங்கிவிட முடியாது. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு பிடித்திருக்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பள்ளிகள் அருகில் இருக்க வேண்டும். சமையல் பொருள்கள் வாங்க அருகில் கடைகள் இருக்க வேண்டும். இவை மட்டுமல்ல வீடு வெளியில் இருந்து பார்ப்பதற்கு மட்டுமல்ல. உள்ளே இருந்து வாழ்வதற்கானதுதான் வீடு. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உள்புறப் பூச்சில் ஏதாவது குறை இருக்கலாம். அதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் உள்ளே வெளிச்சமும், காற்றும் வருவதற்குப் போதுமான வழிகள் இருக்கின்றன. சில வீட்டில் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் திறக்க முடியாதபடி ஜன்னல் உள்ள பகுதியில் கழிவு நீர்ப் பாதைகள் அமைந்திருக்கும் அதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் புகை வெளியேறுவதற்கு உரிய வழி இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுக்குள் எந்த நேரமும் மின் விளக்குளை ஏற்றுவது நல்லதல்ல. ஆதலால் சூரிய ஒளி வீட்டுக்குள் வருவது மாதிரியான அமைப்பு இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பெரியவர்கள், குழந்தைகள் புழங்குவதற்கு ஏற்றார்போல் தரைத்தளம் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம் தேவைக்கு ஏற்ப மின்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறாதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது உதாரணமாகச் சமையலறையில் மிக்ஸர், கிரைண்டர் போன்ர மின்சாதனங்கள் இயக்க கூடுதல் ஸ்விட்ச் போர்டுகள் அவசியம்.

அப்படி இல்லாமல் இருந்தால். நாம் தனியாக ஸ்விட்ச் போர்டு அமைக்க வேண்டியிருக்கும். அதனால் வீண் செலவு, வீட்டின் அலங்காரமும் வெளிப்புறமாக ஸ்விட்போர்டு பொருத்துவதால் பாதிக்கப்படும். மேலும் தண்ணீர் ஒழுங்காக வருகிறதா எனப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். உபயோகிக்க முடியாத அளவில் தண்ணீர் இருந்தால் அந்த வீட்டில் வாழ்வது கஷ்டமாகும்.

Leave a Reply