shadow

வாரத்திற்கு ஐம்பத்து ஐந்து மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்தால் ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாளொன்றுக்கு 8 மணி நேரம் என வாரத்திற்கு ஆறு நாட்களில் 48 மணி நேரம் மட்டுமே அதிகபட்சமாக வேலை செய்யவேண்டும் என அனைத்து நிறுவனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால் ஒரு வாரத்தில் 55 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்தால் உடலில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது

2016 ஆம் ஆண்டில் மட்டும் வேலைப்பளு காரணமாக மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சுமார் 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது