வாயை திறக்கக் கூடாது: இயக்குனர் லோகேஷ்க்கு விஜய் கண்டிஷன்

விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கு ’தலைவர் 169’ படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து உள்ளதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் ’தலைவர் 169’ படத்தை இயக்குவதாக இருந்தால் அது குறித்து ஒரு வார்த்தை கூட வெளியில் பேசக்கூடாது என்று இயக்குனர் லோகேஷூக்கு விஜய் கண்டிஷன் போட்டுள்ளதாக தெரிகிறது
ஏனெனில் லோகேஷ் இயக்கிய ‘கைதி’படத்தை இயக்கி முடித்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், விஜய் படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டபோது, ‘கைதி’ கைது படத்தின் புரமோஷன் பின்னுக்கு தள்ளப்பட்டு விஜய் படத்தை அவர் இயக்குவதாக இருந்த செய்தி மட்டுமே பிரபலமானது

இதேபோல் ’மாஸ்டர்’ படம் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளிவந்தால், அது மாஸ்டர் படத்தின் புரமோஷனை பாதிக்கும் என்பதால் ரஜினிகாந்த் படத்தை இயக்குவது குறித்து அறிவிப்பை இப்போதைக்கு வெளியிட கூடாது என விஜய் கண்டிஷன் போட்டு விட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply