shadow

வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்திலும் வீடியோ கால் வசதி. பயனாளிகள் மகிழ்ச்சி

பிரபல சமூகவலைதளமான வாட்ஸ் அப் விண்டோஸ் ஒஎஸ் பயனாளர்களுக்கு வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் பிறருடன் உரையாடுவதற்காக அதிக அளவில் பயன்படும் சமுக வலைதளமாகும். இதில் மேசேஜ் , போட்டோ, ஆடியோ போன்றவற்றை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் அனுப்பும் வசதியை கொண்டிருந்தது.மற்ற எல்லா சமூக வலைதளங்கள் வீடியோ காலீங் வசதியை வழங்கிவந்த நிலையில் வாட்ஸ் பயனாளர்களுக்கு இது மிகப்பெரிய குறையாக இருந்தது.

இந்நிலையில் அந்த குறையை போக்கும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் வீடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் தற்போதைக்கு இந்த வசதியை விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்து வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த வீடியோ காலிங் சேவையானது ஆண்ராடாய்டு மற்றும் ஐ ஒ எஸ் ஆகிய வசதி கொண்ட ஓஎஸ் மொபைல்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply