shadow

வர்தா புயல் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ‘கஜா புயல்? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 930 கி.மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் வர்தா அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புயல் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி என எந்த பகுதியில் உருவாகியுள்ளது என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் இன்னும் ஓரிரு நாள் கழித்தே சரியாக கரையை கடக்கும் இடம் குறித்த தகவல் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக் கூடும் என்றும், நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்துக்கு வரும் 15-ஆம் தேதி ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply