வரும் ஞாயிறு மாலை 6.30க்கு சன் டிவியில் பிகில் ஒளிபரப்பா?

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியானது

இந்தப் படம் நான்கே நாட்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்துள்ளதாக டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப்களில் செய்திகள் வெளியானது

மேலும் இந்த படம் வெள்ளி சனி ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடியது என்பது உண்மைதான்

ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் முதல் இந்த படத்திற்கு பார்வையாளர்கள் கூட்டம் தலைகீழாக குறையத் தொடங்கிவிட்டது

இதனை அடுத்து பிகில் திரைப்படம் திரையிட்ட தியேட்டர்கள் கைதி திரைப்படத்திற்கு மாற்றப்பட்டதாகவும் ஒரு சில திரையரங்குகளில் போதுமான பார்வையாளர்கள் வராததால் பிகில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் ட்விட்டரில் ஒரு வீடியோ சற்று முன் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிகில் திரைப்படம் வரும் ஞாயிறு மாலை 6.30 ம்ணிக்கு சன் டிவியில் திரையிடப்படுவது போல் ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. அதன் பின்னர்தான் அந்த விளம்பரம் ஒரு குறும்புக்கார ரசிகர் செய்த போலி விளம்பரம் என தெரியவந்தது. இருப்பினும் காமெடிக்காக அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர்

//twitter.com/VillainThala/status/1189949120863076352

Leave a Reply