shadow

வருமான வரிசோதனை எதிரொலி: 4 நாட்களுக்கு பின் இன்று முதல் ஜாஸ் சினிமாஸ் செயல்படும்

வருமான வரிச்சோதனை காரணமாக கடந்த நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஜாஸ் சினிமாஸ் காட்சிகள் இன்றுமுதல் வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை கடந்த 9ஆம் டேதி முதல் நடந்த நிலையில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவன திரையரங்குகளிலும் சோதனை செய்யப்பட்டது

இந்த நிலையில் வருமான வரிச்சோதனை காரணமாக கடந்த 4 நாட்களாக ஜாஸ் சினிமாஸ் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் திரைப்படங்கள் திரையிடப்படும் என்றும் இணையதளங்கள் மூலமாக முன்பதிவும் நடைபெறும் என்றும் ஜாஸ் சினிமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply