வரலட்சுமி, இனியா இணையும் புதிய படம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான வரலட்சுமி மற்றும் இனியா ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இருவருக்கும் சம அளவிலான கேரக்டர்கள் கொண்ட இந்த படத்தை ராம்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது

நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு வெங்கடேஷ் என்பவர் இசையமைக்க உள்ளார். இது ஒரு அதிரடி த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் இந்த படத்தில் வரலட்சுமி மற்றும் இனியா கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த கதையும் என்றும் இந்த இரு கேரக்டர்களும் படத்தின் 90% காட்சிகளில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply