shadow

வணிக நூலகம்: நம்மை ஊக்குவிக்கும் காரணிகள்

16டேனியல் பிங்க் (DANIEL PINK) என்ற நூலாசிரியர் நம் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்ற சில ஆச்சரியமான உண்மை களை இந்த புத்தகத்தில் கொடுத்து இருக்கிறார். இந்த புத்தகம் குறைந்த பக்கங்களையும் தெளிவான எழுத்து நடையையும் முத்திரை பதித்த சொல் வன்மையையும் மிக சாதாரணமாக எடுத்து கூறுகிறது. சில நேரங்களில் பணியாளர்களை ஊக்குவிப்பதில் நம்முடைய முயற்சிகள் தோல்வியடை வது விரும்பாத விளைவுகளை ஏற்படுத்துவதோடு பலனற்று போகிறது.

பிரடெரிக் ஹெர்ஸ்பெர்க் (FREDERICK HERZBERG) என்ற உள வியலாளர் ஊக்குவிக்கும் முறைகளைப் பற்றியும் மனித முயற்சிகளின் அடிப்படை பற்றி ஆய்வு மேற்கொண்டு பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஆனால் ஊக்குவிப்பதை பற்றி அவர் கூறியிருப்பது மிகவும் வித்தியாசமாக உள்ளது. படுத்துக்கொண்டிருக்கும் நாயை முன்னால் உதைத்தாலும், பின்னால் உதைத்தாலும் அது இடத்தை விட்டு நகர்ந்துவிடும். மறுபடியும் அந்த நாயை இடம் மாற்ற தேவை ஒரே ஒரு உதை முன்பக்கமோ அல்லது பின்பக்கமோ என்று மிக சாதாரணமாக 1968ல் HBR என்ற புத்தகத்தில் எழுதுகிறார். அது எச்சரிக்கை மணியை அடித்தது மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான கருதுகோள்களை பலரும் ஏற்படுத்த உதவிசெய்தது.

மன மாற்றத்தையும், எண்ண மாற்றங்களையும் நூலாசிரியர் ஒரு சேர இழைய விடுகிறார். வணிக நிறுவனங் களில் பணியாளர்கள் எவ்வாறு ஊக்கு விக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி அறிந்துக்கொள்ள தவறுவது மட்டு மின்றி. சில நேரங்களில் விபரீத விளைவு களை ஏற்படுத்தும் உத்திகளையும் பயன்படுத்துகின்றன. அதுபோன்ற உத்திகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அவ்வாறு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் செயல்திறனை உயர்த்தும் வழிகளை ஒரே அடியாக அடைத்துவிடுகிறது.

பொருள் சார்ந்த ஊக்குவிக்கும் முறைகள் அனைத்தையும் இந்த நூல் அடித்துத் துவைக்கிறது. மாறாக, பொருள் சாராத ஊக்குவிக்கும் முறைகள் குறிப்பாக ஒவ்வொருவரின் உள்மனதில் தோன்றும் தேவைகளும் எண்ண வெளிப்பாடுகளும் ஊக்குவிக்க மிக முக்கியம் என்ற கருது கோளை நிலை நிறுத்துகிறது. பணம் மட்டுமே ஊக்குவிக்காது. பண்பும் நேர்மறை எண்ணங்களும் ஊக்குவிக்க உதவும். மாட்டுக்கு புல்லைகாட்டுவது போல மனிதர்களுக்கு பணம் சார்ந்த ஊக்குவிக்கும் முறைகளை காட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களின் பணியில் தொய்வு இருக்காது என்ற கூற்று ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல. மனித மனங்களை ஊக்குவிக்க சீரிய ஆர்வமிக்க திறமையான சக்தியான உந்துதல்கள் அவசியம் என்று நூலாசிரியர் நிறுவி காட்டுகிறார்.

தன்னாட்சி, பணி ஆதிக்கம், தேவை ஆகிய மூன்று காரணிகள் மனிதர்களை தங்களுடைய இலக்குகளை அடைய பெரிதும் ஊக்குவிக்கின்றது. தன்னாட்சி என்பது அவரவர் சொந்த விருப்பு. வெறுப்புகளில் என்ன செய்ய வேண்டும் எதை செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தங்களை தாங்களே ஊக்குவித்துக் கொள்ளுதல். பணி ஆதிக்கம் என்பது செயல் முறைகளிலும் செயல் திறனிலும் மேம்பாட்டை நிறுவிக்காட்டுதல். தேவை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த தேவைகளாக கணக்கில் கொள்ளுதல். பெரும்பாலும் உடல் சார்ந்த தேவைகள் பெரும் அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் மனம் சார்ந்த நேர்மறை தேவைகள் ஊக்குவித்தலை அதிகப்படுத்தி மேற்கொண்ட செயலை நிச்சயம் நினைத்த வண்ணம் முடிக்க உதவுகிறது.

கூகுள் நிறுவனத்தில் புதிய வேலை திட்டங்களில் இருபது விழுக்காடு நேரம் செலவிட பணியாளர்கள் ஊக்கு விக்கபடுகிறார்கள் . நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர் இருபது சதவீத எண்ணம் ஒரு புதிய பரிமாணத்தையோ, புதிய பொருளையோ, புதிய வழிமுறையையோ தோற்றுவிக்கும் என்றால் ஒருமித்த கருத்துடைய சிலரை ஒருங்கிணைப்பதன் மூலம் புதிய வேலை திட்டம் பெரும் அளவு மாற்றம் கண்டு ஆக்கபூர்வமான பணி மேற்கொள்ள ஏதுவாகிறது என கூறுகிறார்.

பணி ஆதிக்கம் என்பது விழாவில் தங்களே தாங்களை மறந்து பேசுவதற்கு ஒப்பானதாகும். நிகழ்வுகளிலும், அருகில் ஏற்படும் செயல்களிலும் அதிக ஈடுபாடுடன் இருக்கும் எவரும் தன்னை மறந்த நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க முடியாது. பணி ஆதிக்கம் என்பது பணியில் தங்களுடைய முழு திறமையையும் நிறுவிக்காட்டி அந்த செயல்களோடு ஒன்றி போவது என்பது ஆகும். ஒரு பணியை செய்து முடிக்க உள்ளார்ந்த பொங்கி பெருகும் அனுபவம் மிகவும் தேவை என்று ஒரு ஹங்கேரிய உளவியலாளர் படம் பிடித்துக் காட்டுகிறார்.

பணியில் ஆதிக்கம் செலுத்த கடின உழைப்பும், படிப்படியான நிறைவான செயல் திறனும் மிகவும் அவசியம். பணியில் ஆதிக்கம் செலுத்துவது என்பது வெளியில் உள்ளவர்கள், பணம், புற காரணிகள் போன்றவைகளால் நிகழ்வது அல்ல. மாறாக, மனதில் உள்ளிருந்து தோன்றும் எண்ணம். உள்ளிருந்து வரும் உத்தரவுக்கு மனம் எளிதாகவும், எப்போதும் கட்டுப்படும். மாறாக, வெளியில் இருந்து வரும் உத்தரவுகளையும், தெரிவிக்கும் கட்டுப்பாடுகளையும் புரட்சிக்காரன் பகைவர்களை எதிர்ப்பது போல தாக்குவதில் முனைப்பு கூடும்.

தேவைகள் கண்டுபிடிப்புகளின் தாய் என்ற சொற்றொடரை இந்த இடத் தில் கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். தேவைகளை அதிகப்படுத்து தல் என்பது லாபத்தை அதிகப்படுத்து தலை விட ஒரு முக்கியமான நிறுவன கருத்து ஆகும். நிறுவனங்கள் வியாபார நோக்கில் லாபத்தை மட்டும் அதிகப்படுத்தும் போது பணியாளர்கள் இயந்திர கதியில் தன்னாட்சி, பணி ஆதிக்கம் மற்றும் தேவைகளை துறந்து பணியாற்றுகிறார்கள். பணியின் முடி வில் பூரிப்போ, புத்துணர்ச்சியோ, மகிழ்ச் சியோ, சாதனை புரிந்த உணர்வோ எழுவது இல்லை. மாறாக தேவைகளை அதிகப்படுத்தும் செயல் மூலம் உள் மனதில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி அனைத்து செயல்பாடு முறைகளையும் அந்த இடத்தை நோக்கி குவிக்கும் பொழுது வேலைகள் விரைவாக செய்து முடிக்கப்படுக்கின்றன. மகிழ்ச்சி மலர்ச்சி காட்டுகிறது. புத்துணர்ச்சி பீடு நடை போடுகிறது.

தவறான பணம் சார்ந்த வெகுமதிகள் பொருளாதார நெருக்கடியை நிறுவனங்களில் ஏற்படுத்துவது என்பது மிகை யல்ல. புறக்காரணிகள் கொண்டு ஊக்கு விக்கும் முறைகள் கிட்டப்பார்வைக்கு ஒப்பானது. புற காரணிகளை கொண்டு ஊக்குவிக்கும் முறைகள் பகுத்தறிவு சார்ந்த உத்தரவுகளின் பதிலாக கருத முடியாது. பெரும்பான்மையான பொருளாதார நிபுணர்கள் மனிதரை ஒரு பொருளாதார விலங்காக தான் உருவகப்படுத்துகிறார்கள். மனிதரிடம் எண்ணம், புரிதல், ஆழ்மனது, பட்டறிந்த பகுத்தறிவு ஆகியன இல்லாமல் போனால் ஒரு வேளை பொருளாதார விலங்காக இருக்கலாம். மாறாக, மேற்கூறிய அனைத்தையும் நினைத்து அகக்காரணிகளை கொண்டு செயல்படும் பொழுது மனித முடிவுகள், தேவைகள், வெளிப்பாடு கள், திறமைகள் அனைத்தும் எண் களின் கூட்டுத் தொகையாக மட்டும் அல்லாமல். உணர்வு மற்றும் எண்ணங் களின் வெளிப்படாக அமைகின்றது.

Leave a Reply