shadow

வடிவேல் பாணியில் பதில் கூறிய டிடிவி தினகரன்

காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வண்டுமுருகன் என்ற வக்கீலாக நடித்திருப்பார். அந்த படத்தில் குற்றவாளி ஒருவருக்கு எதிராக வடிவேலு வாதாடி கொண்டிருக்கும்போது திடீரென அந்த குற்றவாளி தான் திருடிய பணத்தை வண்டுமுருகனிடம் கொடுத்து வைத்துள்ளேன் என்று கூறி வடிவேலுவை சிறைக்கு அனுப்பிவிடுவார்.

அதேபோல் டிடிவி தினகரன் ரூ.20 ஆயிரம் கோடி சொத்துக்களை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சேர்த்துள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தினகரன், ‘நான் கொள்ளையடித்த 20 ஆயிரம் கோடியை ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதற்கு தான் ஜெயக்குமார் இப்படி பபூன் மாதிரி தினமும் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

மேலும் இவர்கள் தாய் போல் இருந்த பொதுச்செயலாளருக்கே துரோகம் செய்தவர்கள் என்றும் அவர்களை தூக்கி எறியக்கூடிய காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Leave a Reply