shadow

லைகாவின் அடுத்த படத்தில் த்ரிஷா

லைகா நிறுவனம், தற்போது ‘இந்தியன் 2’, ‘காப்பான்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிலையில் த்ரில்லர் படம் ஒன்றையும் தயாரிக்கவுள்ளது.

எங்கேயும் எப்போதும்’ இயக்குனர் சரவணன் இயக்கவுள்ள இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளார். இதுவொரு சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படம் என்பதும் த்ரிஷாவுக்கு இந்த படத்தில் ஜோடி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவிருப்பதாகவும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply