லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி! மருத்துவர்களின் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சமீபத்தில் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல பாலிவுட் பின்னணி பாடக் லதா மங்கேஷ்கர் சுவாசக் கோளாறு பிரச்னை காரணமாக மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் லதா மங்கேஷ்கரின் உறவினரான பாடகி ரச்சனா ஷா வெளியிட்டுள்ள விளக்கத்தில், “லதா மங்கேஷ்கர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நல்ல உடல்நலத்தோடு உள்ளார். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருவார். அவரது வயதின் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடனே உள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply