shadow

லண்டன் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம்: மர்ம கும்பலை கண்டுபிடிக்க தீவிரம்

ஜெர்மனியை சேர்ந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்கள் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினார். சுமார் 35 வருடங்கள் லண்டனில் தங்கியிருந்த அவர் 1885-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி தனது 64-வது வயதில் மரணம் அடந்தார். இதனையடுத்து லண்டனில் அவரது கல்லறை அமைக்கப்பட்டு அதனை புனிதச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வடக்கு லண்டனில் உள்ள கார்ல் மாக்ஸ் கல்லறை நினைவுச் சின்னமாகவும், பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த கல்லறையை யாரோ மர்ம கும்பல் ஒன்று நேற்றூ இடித்து சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லறையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்,

 

Leave a Reply