shadow

ரோபோவால் வேலை இழக்கும் எலக்ட்ரீஷியன், பிளம்பர் மற்றும் நர்ஸ்கள்: அதிர்ச்சி தகவல்

கடந்த சில ஆண்டுகளாக ரோபோவின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் பலர் வேலையிழந்துள்ளனர். ரெஸ்டாரெண்ட் வெயிட்டர்ஸ், உள்பட பல பணிகளில் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது. சம்பள உயர்வு, விடுமுறை, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எந்த பிரச்சனையும் செய்யாமல், ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும் என்பதால் பல தொழிலதிபர்கர் ரோபோக்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் காலத்தில் எலக்ட்ரிக், பிளம்பிங் மற்றும் நர்ஸிங் பணிகளிலும் ரோபோக்களை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் எலக்ட்ரீஷியன், பிளம்பர் மற்றும் நர்ஸ்கள் இன்னும் சில ஆண்டுகளில் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலை நீட்டிதால் இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களுக்கே வேலையில்லாமல் போகும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது

Leave a Reply